உதகையில் காலாவதியான 80 கிலோ மீன் இறைச்சிகள் அழிப்பு

உதகையில் காலாவதியான 80 கிலோ மீன் இறைச்சிகளை உணவு பாதுகாப்பு துறையினர் அழித்தனர்.;

Update: 2022-04-22 11:29 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டம், உதகை மார்க்கெட் சந்தையிலுள்ள மீன் கடைகளில் பழைய மீன்கள் விற்கப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் வந்ததையடுத்து, இன்று மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது சுமார் 80 கிலோ பழைய மீன்களை கைப்பற்றி அதனை அளித்தனர். இதனை தொடர்ந்து வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து எச்சரித்தனர். ஆய்வின்போது மீன் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்பு துறையினர் கடல்சார்ந்த மீன்கள் உதகைக்கு வருவதற்கு நான்கு நாட்கள் ஆகும் நிலையில் மீன்களைப் பார்த்து நல்ல மீன்களை மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

மேலும் உணவு சார்ந்த 94440 42322 என்ற எண்ணிற்கு புகார் அளித்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News