நீலகிரி மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்
நீலகிரி மாவட்டம் முழுவதும் 270 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. உதகை ஹில்பங்க் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி செலுத்த வந்த மக்களிடம் முதல் தவணை, இரண்டாவது தவணை செலுத்தப்பட்டு உள்ளதா என கேட்டறிந்தார்.
கொரோனாதொற்று பரவி வருவதால் வீட்டின் அருகே உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தி கொள்ள தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால், முழுமையாக பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.