நீலகிரி எல்லையில் கலெக்டர் அம்ரித் திடீர் வாகன சோதனை

பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ. 99,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக கலெக்டர் தெரிவித்தார்.;

Update: 2022-03-21 04:10 GMT

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை சோதனை சாவடியில் கலெக்டர் அம்ரித்.

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் பிற மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களில் சோதனையிட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வந்தால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

கோத்தகிரி அருகே குஞ்சப்பனை சோதனை சாவடியில் கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு சுற்றுலா பயணிகள் வாகனங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதை ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்று சோதனை செய்ய வேண்டும். சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் 4 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை நடத்தினர்.

கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் 40.65 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

அதனை பயன்படுத்தியவர்களுக்கு ரூபாய் 99,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது என்று கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

Similar News