உதகை நகர வார்டுகளில் முழுவீச்சில் தூய்மை பணி

உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் உத்தரவுபடி, நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், தூய்மைப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.;

Update: 2021-06-03 06:18 GMT

தமிழகத்தின் பிற மாவட்டங்களை போலவே நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா  பாதிப்பு உள்ளது. இதனால், இரண்டாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள,  நீலகிரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் உதகை நகராட்சி பகுதிகளில், உதகமண்டலம் நகராட்சி சார்பில் தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உதகை அருகே எல்க் ஹில் எனும் வனப்பகுதியில், டன் கணக்கில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை,  30க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அகற்றி வனப்பகுதியை தூய்மைப் படுத்தினர்.

அதுமட்டுமின்றி, உதகமண்டலம் நகராட்சி சார்பில், அனைத்து வார்டுகளிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News