பள்ளிக்குள் புகுந்து கரடி செய்த அட்டகாசம்

கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-04-04 15:27 GMT

உதகை ஊராட்சி ஒன்றியம் உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கடசோலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது. 2 வகுப்பறைகளின் கதவுகள் உடைந்து இருந்தது. பள்ளிக்குள் கரடி புகுந்து சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் அறையில் இருந்த பீரோவை திறந்து பதிவேடுகளை வெளியே எடுத்து வீசியதால் சிதறி கிடந்தது. சமையல் அறைக்குள் நுழைந்த கரடி அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை தின்று சேதப்படுத்தி உள்ளது. இதனால் மாணவர்கள் உள்ளே அமர முடியாமல் பள்ளி வளாகத்தில் அமர்ந்து இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உதகை வடக்கு வனச்சரகத்தினர் பள்ளிக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அருகே உள்ள வீட்டு கதவை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி சென்றது. கரடி நடமாட்டத்தான் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனால் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News