உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
உதகை நகராட்சி அதிகாரிகளால் ஒரு கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.;
உதகை கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்.
உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு பழக்கடைகள் உள்ளன. இங்கு, நீலகிரியில் விளையும் ஸ்ட்ராபெரி, பிளம்ஸ், பிளிச்சி, ஊட்டி ஆப்பிள் போன்ற பழங்கள் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பழங்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களில் பேக்கிங் செய்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.
கலெக்டர் அறிவுரையின் பேரில், இன்று உதகை நகராட்சி சுகாதார அதிகாரிகள் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள பழக்கடைகளுக்கு சென்று சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. ஒரு கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று நடைபாதை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.