நீலகிரியில் 7.96 லட்சம் பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறைஅதிகாரிகள்

கொரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-10-21 11:45 GMT

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 360 நிலையான தடுப்பூசி மையங்கள் மற்றும் 20 நடமாடும் தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் 380 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஒரு முகாமில் தடுப்பூசி செலுத்தும் கிராம சுகாதார செவிலியர் அல்லது செவிலியர், ஒரு தரவு பதிவாளர், 2 அங்கன்வாடி பணியாளர்கள் என மொத்தம் 1,520 பணியாளர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள்.

18 வயதுக்கு மேல் முதல் மற்றும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். 2-வது டோஸ் செலுத்த அரசு பணியாளர்கள் டோக்கன்கள் வழங்கி வருகின்றனர். நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய சம்பந்தமான நோய் உள்ளவர்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள் என அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 15 ஆயிரத்து 885 பேர் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். 2 லட்சத்து 80 ஆயிரத்து 881 பேர் 2-வது டோஸ் போட்டுக்கொண்டனர். மொத்தம் 7 லட்சத்து 96 ஆயிரத்து 766 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா இல்லாத நீலகிரியை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News