முழு ஊரடங்கால் களையிழந்த நீலகிரி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால், நீலகிரியில் முக்கியச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Update: 2021-04-25 13:44 GMT

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை  பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று முழு ஊரடங்கு  கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை மையப்பகுதியில் உள்ள சேரிங் கிராஸ் , தாவரவியல் பூங்கா மத்திய பேருந்து நிலையம்,  கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல், கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலை, மத்திய பேருந்து நிலையம், மார்க்கெட், மெயின் பஜார், உள்ளிட்ட சாலைகளும் ஆட்கள் நடமாட்டமின்றி இருந்தன. நகரில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காரணமின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News