தீப்பிடித்து எரிந்த கார்- உயிர் தப்பிய குடும்பம்

Update: 2021-03-10 05:30 GMT
தீப்பிடித்து எரிந்த கார்- உயிர் தப்பிய குடும்பம்
  • whatsapp icon

ஊட்டியிலிருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஊட்டியில் இருந்து கல்லட்டி செல்லும் மலைப்பாதை 38 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட செங்குத்தான மலைப் பாதை ஆகும். நாள்தோறும் இச்சாலை வழியே கேரளா மற்றும் மைசூர் செல்லக்கூடிய இலகுரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சென்று வருகின்றன.இந்நிலையில் நேற்றிரவு மைசூரில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் திடீரென 18 வது கொண்டை ஊசி வளைவில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரை விட்டு இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீப்பிடித்த காரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் இச்சாலை வழியே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News