கூடலூரில் கைப்பந்து பயிற்சி முகாம்!
Koodalloor Ooty-நீலகிரி மாவட்டம் கூடலூரில் கைப்பந்து பயிற்சி முகாம் துவங்கியுள்ளது.;
Koodalloor Ooty
Koodalloor Ooty-நீலகிரி மாவட்டம் கூடலூரில் கைப்பந்து பயிற்சி முகாம் துவங்கியுள்ளது.
கூடலூர் கைப்பந்து கழகம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கோடை கால கைப்பந்து விளையாட்டு பயிற்சி முகாம் கடந்த மே 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுக்க பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அந்தந்த மாவட்ட அமைப்புகள், விளையாட்டு கழகங்கள் என பல்வேறு அமைப்புகள் கோடைக் கால சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் முகாம் நடைபெறுகிறது.
கைப்பந்து கழகம் சார்பில் துவங்கப்பட்ட இந்த கைப்பந்து விளையாட்டு பயிற்சி முகாமில் அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும், அருகாமையில் இருக்கும் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.
மொத்தம் 46 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டுள்ள இந்த பயிற்சி முகாம் காலை 6 மணிக்கு துவங்கி காலை 9 மணி வரையிலும், மாலை 4 மணி துவங்கி 6 மணி வரையிலும் நடைபெறுகிறது. இந்த பயிற்சி முகாம் கூடலூர் மார்த்தோமா நகர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
மே 1ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த முகாம் வரும் மே 15ம் தேதி வரையில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2