நீலகிரி மாவட்டத்தில் ரூ. 1.22 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்; அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் ரூ. 1.22 கோடி மதிப்பில் நடந்துவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

Update: 2023-08-05 13:09 GMT

Nilgiri News, Nilgiri News Today-- நீலகிரி மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் குழு. 

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை மற்றும் பேரூராட்சித் துறை சாா்பில் அதிகரட்டி பேரூராட்சியில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சேமந்தாடா முதல் பூசானிதுறை வரை ரூ.28.65 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை பணிகள் முடிந்து உள்ளது இதேபோல சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் தூரட்டி கிராமத்தில் தாா்சாலை பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ரூ.53.65 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இதனைத் தொடா்ந்து, கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட தூரட்டியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூட சமையலறை மேற்கூரை பணி, 2022-2023 நகா்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.87.50 லட்சம் மதிப்பில் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டேரி முதல் கேத்தி பாலாடா வரை மற்றும் கோடேரி கிராம தாா் சாலை மேம்பாட்டுப் பணி, தூய்மை இந்தியா திட்டம் 2.0 கீழ் ரூ.24.50 லட்சம் மதிப்பில் வளம் மீட்புப் பூங்காவில் கான்கிரீட் தரைத்தளம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணி ஆகியவை உள்பட மொத்தம் ரூ.1.22 கோடி மதிப்பில் நடந்த வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மேற்கண்ட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, அதிகரட்டி தோ்வு நிலை பேரூராட்சி வளம் மீட்புப் பூங்காவில் உரம் விற்பனை நிலையத்தை திறந்துவைத்த அமைச்சர், அங்கு உள்ள விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினார். மரக்கன்றுகளை நடவு செய்தார். ஜெகதளா, உலிக்கல், அதிகரட்டி ஆகிய பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை ஆய்வு செய்த சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன், சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள் 4 பேருக்கு உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் குன்னூா் வருவாய் கோட்டாட்சியா் பூஷணகுமாா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) இப்ராகிம் ஷா, கேத்தி மற்றும் அதிகரட்டி பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) நடராஜன், ஜெகதளா பேரூராட்சி செயல் அலுவலா் சதாசிவம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News