உதகை மார்க்கெட் கடைகள் இடமாற்றம்

கொரோனா காரணமாக ஊட்டி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் காய்கறி கடைகளுக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Update: 2021-05-08 17:30 GMT

கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வகையில் உதகை மார்க்கெட்டில் உள்ள 160 காய்கறி கடைகள் அரசினர் மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு மாற்றும் பணி நடந்து வருகிறது..

புதிய ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகளான காய்கறி கடைகள் மளிகை கடைகள் நேர கட்டுப்பாடுடன் இயங்கிவருகிறது. இதையடுத்து உதகை மார்க்கெட் பகுதியில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகமாக கூடுவதால் மாற்று இடத்தில் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து உதகை மார்க்கெட் பகுதியில் செயல்படும் 160 காய்கறி கடைகள் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செயல்பட உள்ளது அதற்காக கடைகளுக்கான அளவீடு செய்யும் பணியும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வட்டங்களிடும் பணியை உதகை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது.

இடமாற்றம் செய்வது குறித்து மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் ரவிக்குமார் கூறுகையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காய்கறி கடைகள் மைதானத்திற்கு மாற்றப்படும் எனவும் பழக்கடை இறைச்சிக் கடைகள் எப்போதும்போல் மார்க்கெட்டில் லேயே இயங்கும் பொதுமக்கள் வழி நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து அனுமதிக்கப்படுவர் என கூறினார்.

Tags:    

Similar News