சுற்றுலா தலமான கோத்தகிரியில் நாய் தொல்லையால் மக்கள் அவதி

சுற்றுலா தலமான கோத்தகிரியில் நாய் தொல்லையால் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.;

Update: 2023-07-09 17:10 GMT

தெரு நாய்கள் (கோப்பு படம்)

சுற்றுலா தலமான கோத்தகிரியில் நாய்களின் தொல்லையால் மக்கள் தினமும் அவதி அடைந்து வருகிறார்கள்.

மலைகளின் ராணி என அழைக்கப்படுவது ஊட்டி. இந்திய அளவில் சிறந்த சுற்றுலா தலமான ஊட்டி தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஊட்டிக்கு செல்லும் வழியில் கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒருமாத காலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு, சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருகின்றனர். இதனால் அந்த நாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. அதுவும் இரவு நேரங்களில் இவற்றின் தொல்லை அதிகமாகும்.

நேற்று இரவு கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது. அந்த தெரு நாய்களை அங்கிருந்த ஒருவர் துரத்த முற்பட்ட போது அவரை அந்த நாய்கள் ஆக்ரோஷமாக கடிக்க சென்று விட்டன. அவர் உடனே அங்கிருந்து பயந்து ஓடிவிட்டார். இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தெரு நாய்களின் தொல்லையால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கூட ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் இந்த அச்சத்தை போக்க சுகாதார துறையும் நீலகிரி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசின் சுற்றுலா துறையும் தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News