ஊட்டி சிறப்பு மலை ரயிலில் புதிதாக 4 பெட்டிகள் இணைப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Nilgiri News, Nilgiri News Today- மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரயிலில் புதிதாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2023-08-14 17:21 GMT

Nilgiri News, Nilgiri News Today- மேட்டுப்பாளையம்-ஊட்டி சிறப்பு மலை ரயிலில், புதிதாக 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்றாக மலை ரயில் உள்ளது. இந்த ரயில் சேவை, ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். இதனால் நீலகிரி மலை ரயில் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மலை ரயில், ஊட்டி-குன்னூர் மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படுகிறது.

இந்த மலை ரயிலில் பயணிக்க நீலகிரி மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி, ஊட்டிக்கு வருகின்றனர். இதனால் மலை ரயிலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பயணிகள் மலை ரயிலில் பயணிக்க சீட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை இருந்து வருகிறது.

இதற்கிடையே சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளுக்காக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை எளிதாக கண்டுகளிக்கும் வகையில், புதியதாக ரயில் பெட்டிகளை, கூடுதலாக இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள், செல்லும் வழிகளில் இருபுறங்களிலுள்ள நீர்வீழ்ச்சி, மலை உள்ளிட்ட இயற்கை காட்சிகளை எளிதாக கண்டு ரசிக்கும் வகையில், இருபக்கவாட்டிலும் அதிகளவு கண்ணாடிகள் பொருத்திய 4 புதிய ரயில் பெட்டிகளை தயார் செய்து இணைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அந்த 4 புதிய பெட்டிகள் இன்று சிறப்பு மலை ரயிலில் இணைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பயணித்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News