அரக்கோணத்தில் விசிக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்ட இருவர் கொல்லபட்ட சம்பவத்தை கண்டித்து ஊட்டியில் விடுதலைசிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து தேர்தல் பணி மேற்கொண்ட 5 பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 2 பேர் உயிரிழந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாதி ரீதியான கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதே போல் குடிசைகளுக்கு தீ வைத்தவர்கள் மீதும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதில் நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு மாநில அரசையும் காவல் துறையையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.