கெத்தை மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம்; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

Nilgiri News, Nilgiri News Today- கெத்தை மலைப்பாதையில் கடந்த 2 நாட்களாக குட்டியுடன் தாய் யானை சுற்றித்திரிவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2023-06-25 11:19 GMT

Nilgiri News, Nilgiri News Today- கெத்தை மலைப்பாதையில், குட்டியுடன் தாய் யானை சுற்றித்திரிகிறது.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை மாவட்டம் காரமடைக்கு செல்லும் கெத்தை மலைப்பாதை பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாக உள்ளது. இதனால் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிகின்றன. இதையொட்டி மாலை 6 மணிக்கு பிறகு வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2 மாதங்களாக கெத்தை மலைப்பாதையில் 6 யானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது சாலையில் முகாமிடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், கெத்தை மலைப்பாதையில் கடந்த 2 நாட்களாக யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து குட்டியுடன் தாய் யானை சுற்றித்திரிகிறது. வழக்கமாக குட்டியுடன் உலா வரும் காட்டுயானைகள் வாகனங்களின் அருகில் வந்தால் தாக்க முயற்சி செய்யும். ஆனால் இந்த யானைகள் எதுவும் செய்யாமல் அமைதியாக உலா வருகின்றன. சில நேரங்களில் குட்டி யானை கிளைகளை சாலையில் இழுத்து போட்டு சேட்டையில் ஈடுபடுகிறது. இதை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே யானைகள் நடமாட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கவனமுடனும், அதே சமயம் யானைகளுக்கு இடையூறு செய்யாமலும் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.

கரடிகள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

குன்னூரில் இருந்து 10 கி. மீ. தொலைவில் மேல் பாரதி நகர், பாரதி நகர் பகுதிகள் உள்ளன. இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் செய்து வருகின்றனர்.

இந்த கிராமங்களில் சமீப நாட்களாக கரடி நடமாட்டம் இருந்து வந்தது. கடந்த வாரம் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து, பொருட்களை கரடி சேதப்படுத்தியது. இதுகுறித்த தகவலின் பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். மேலும் கரடி நடமாட்டம் கேமராவில் பதிவானால்தான் கூண்டு வைத்து பிடிக்க முடியும் என்று கூறியதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கரடி தினமும் இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் புகுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு 7 மணிக்குள் தங்கள் வீடுகளில் முடங்கி விடுகின்றனர். பல்வேறு பணிகளுக்காக வெளியே சென்று வருபவர்கள் கரடி நடமாட்டத்தால் அச்சத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.

எனவே, அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன்பு வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News