நீலகிரி மாவட்டத்தில், எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

Nilgiri News, Nilgiri News Today - நீலகிரி மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகங்கள் முன்பு, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-11 11:07 GMT

Nilgiri News, Nilgiri News Today- கூடலூரில், எல்ஐசி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எல்ஐசி முகவர்கள்.

Nilgiri News, Nilgiri News Today- எல்ஐசி பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும், பாலிசிதாரர்களின் கடனுக்கான வட்டி சதவீதத்தை குறைக்க வேண்டும், பீமா சுகம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பாலிசி முதிர்வு தொகைக்கு வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் அகில இந்திய எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தினர் எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பு நேற்று முதல் கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கூடலூர், ஊட்டி, குன்னூரில் உள்ள எல்.ஐ.சி. கிளை அலுவலகங்கள் முன்பு கோரிக்கை விளக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் மோகனன் முன்னிலை வகித்தார். கோவை கோட்டத்தலைவர் பிரேம்குமார், 8 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து நிர்வாகிகள் பேசினர். முடிவில் அய்யப்பன் நன்றி கூறினார்.

இதில் கூடலூர், பந்தலூர் தாலூகா பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி. முகவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் குறித்து எல்.ஐ.சி. முகவர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது, 

மிக முக்கியமான 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி. அலுவலகங்கள் முன்பு முகவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடத்தப்படும். அடுத்த மாதம் 13-ம் தேதி சென்னையில் தென் மண்டல எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு முகவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றனர்.

Tags:    

Similar News