முக கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை
நீலகிரியில் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு 6 மாதம் சிறை – கலெக்டர் அறிவிப்பு.
நீலகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இ- ரிஜிஸ்ட்ரேஷன் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மாஸ்க் அவசியம். அணியாதவர்ளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளில், 20 பேர் கொண்ட சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. தவிர, போலீசார் ஒருங்கிணைப்புடனும் மாஸ்க் அணியாதவர்கள் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாளில் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் இன்ன சென்ட் திவ்யா கூறுகையில், சமீப காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம். மாஸ்க் அணியாமல் கொரோனா பரவலுக்கு வழி வகுப்பவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார்.