கோத்தகிரி பகுதிகளில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் மக்கள் அச்சம்

கோத்தகிரியில் கடந்த வாரம் கூண்டு வைத்து கரடி பிடிபட்டது மீண்டும் குட்டிகளுடன் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-07-14 05:03 GMT

கோத்தகிரியில் சாலையில் சுற்றித் திரியும் கரடிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.தற்போது மிளிதேன் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்து பொது மக்களை அச்சுறுத்தி வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

மீண்டும் அதே பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் மூன்று கரடிகள் உலா வருவதால் பொது மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.எனவே வனத்துறையினர் கரடிகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News