குன்னூர் சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று தொடங்கும் 64 ஆவது பழ கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க 2000 கிலோ திராட்சைகளால் பிரம்மாண்ட கிங்காங் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது

Update: 2024-05-24 10:45 GMT

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக் கண்காட்சி 

சிம்ஸ் பூங்கா துவங்கி 150 வது ஆண்டை கொண்டாடும் வகையில் 150 பழவகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக இரண்டு நாட்கள் நடைபெறும் பழக்க கண்காட்சி முதன்முறையாக இந்த ஆண்டு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது .

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சிகள் மற்றும் பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது,

இந்த ஆண்டு ராேஜா கண்காட்சி நிறைவடைந்த நிலையில் இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64ஆவது பழக்கண்காட்சி தொடங்குகிறது.

குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக சிம்ஸ் பார்க் உருவாகி 150 வது ஆண்டை குறிக்கும் வகையில் சிறப்பம்சமாக குழந்தைகளை கவரும் விதமாக 15 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட 2000 கிலோ திராட்சை பழங்களால் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட கிங்காங் உருவம், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் " GO ORGANIC" போன்ற வடிவமைப்புகள் பழங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன,

இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, தேனி, கொடைக்கானல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத் துறையினர் கண்காட்சியில் பங்கு கொண்டுள்ளனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த ஆண்டு மூன்று நாட்கள் இந்த பழ கண்காட்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News