நீலகிரியில் 14வது நாளாக விவசாயிகள் போராட்டம்

Nilgiri News- தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி, நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம், 14வது நாளாக இன்றும் நீடித்தது.;

Update: 2023-09-14 15:43 GMT

Nilgiri News- 14வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டக்கல் பகுதியில் தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி, அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ம் தேதி முதல் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 14 நாட்களாக தொடர்ந்து இன்றும் நீடித்தது. 

போராட்டத்தின் 13-வது நாளான நேற்று கேர்பெட்டா, கேர்பெட்டா ஒசஹட்டி, கேர்பெட்டா நடுஹட்டி, பெந்தட்டி, கொணவக்கரை, பேட்ட லாடா, தப்பக்கம்பை, ஈடுக்கொரை ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் திரளாக வந்திருந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் கேர்பெட்டா பகுதியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள நட்டக்கல் போராட்ட பந்த லுக்கு புறப்பட்டு வந்தனர். அப்போது தேயிலை கொள்முதல் விலையேற்றம் செய்து கொடு என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணி நடத்தப்பட்டது. நீலகிரி விவசாயிகள் போராட்டத்துக்கு தற்போது கோத்தகிரி வட்டார வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

அதன்படி கோத்தகிரி தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் கேசவன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மார்கெட், டானிங்டன், ராம்சந்த் வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று நட்டக்கல் பகுதிக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, கோத்தகிரி டானிங்டன் பகுதியில் அனைத்து கடைகளும் மதியம் 2 மணி நேரம் அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல அப்பகுதியில் உள்ள ஆட்டோக்களும் இயங்கவில்லை. இந்த நிலையில் கூடலூர் எம்.எல்.ஏ பொன் ஜெய்சீ லன் நேற்று உண்ணாவிரத பந்தலுக்கு வந்திருந்தார்.

அப்போது அவர் கூட்டத்தினருக்கு மத்தியில் பேசும்போது, நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும், தேயிலைக்கு அடிப்படை விலை நிர்ணயம் செய்வது சம்பந்தமான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் என்று கூறி தனது ஆதரவை தெரிவித்தார். 

Tags:    

Similar News