விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்; அதிகாரிகளுக்கு நீலகிரி கலெக்டர் அறிவுறுத்தல்
Nilgiri News- உழவர் கடன் அட்டைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீனையில் உள்ளது. விரைவில் வழங்க வேண்டும் என, நீலகிரி கலெக்டர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.;
Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது,
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான மரநாற்றுகள் குறித்து விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அங்கக வேளாண்மை மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நீலகிரி கூட்டுறவு வணிக சங்கம் மூலம் உரங்களை சிறியளவில் சில்லரை விற்பனை மூலம் சிறு,குறு விவசாயிகளுக்கு 5 முதல் 10 கிலோ வரையிலான உரங்களை வழங்குமாறு கேட்ட விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்யப்படும்.
மேலும் என்.சி.எம்.எஸ் மூலம் உரங்களிடம் சேமிப்பிடம் அமைப்பதற் கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உழவர் கடன் அட்டைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்கலைத்துறை இணை இயக்கு நர் ஷிபிலாமேரி, இணை இயக்குநர் (மருத்துவபணிகள்) பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.