நீலகிரி மாவட்டத்தில், பார்த்தீனியம் செடிகளை அழிக்க, விவசாயிகள் கோரிக்கை

Nilgiri News, Nilgiri News Today- விஷத்தன்மை மிகுந்த பார்த்தீனியம் செடிகளை அழிக்க வேண்டும் என, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-08-31 16:24 GMT

Nilgiri News, Nilgiri News Today- விஷத்தன்மை மிகுந்த பார்த்தீனியம் செடிகள் (கோப்பு படம்)

Nilgiri News, Nilgiri News Today- நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகளின் எதிரியாக உருவெடுத்திருக்கும் பார்த்தீனியம் விஷசெடி அதிகமாக பரவி படர்ந்து இருப்பதாக சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

இது வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்தியாவுக்கு கடந்த 1953-ம் ஆண்டு கோதுமை இறக்குமதி செய்யப்பட்ட போது, இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் கோதுமையோடு வளர ஆரம்பித்தது. அதன்பிறகு படிப்படியாக இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு பரவியது. தமிழகத்தில் நீலகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் பார்த்தீனியம் செடிகள் வளர்ந்து வருகின்றன. இது எல்லா காலநிலையிலும் வளரும் தன்மை உடையது. ஒரு செடி 5000 விதைகளை காற்றின் மூலம் பரப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 42 மில்லியன் ஹெக்டர் பரப்பில் பார்த்தீனியம் செடிகள் தற்போது வளர துவங்கி உள்ளது. இதில் ஆட்ரோசின் நச்சு பொருள் உள்ளது. இது நிற்கும் இடத்தில் வேறு எந்த செடிகளையும் வளர விடாது. பார்த்தீனியம் செடிகளை ஆடு-மாடுகள் தின்றால், அவற்றின் பால் நஞ்சாகி மனிதர்களுக்கு தொற்று நோய்களை உருவாக்கும். காற்றின் மூலம் பரவுவதால் ஆஸ்துமா, அலர்ஜி, படர்தாமரை போன்ற வியாதிகளும் ஏற்படும். நீலகிரி மாவட்டத்தில் பார்த்தீனிய விஷச்செடி வேகமாக விரவி படர்வது, விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. விவசாய நிலமும் கெட்டித்தன்மை அடைவதால், அங்கு உள்ள புழு பூச்சிகள் அழிந்து விடுகின்றன.

கோத்தகிரி, கூக்கல்துறை, குன்னூர், குந்தா, ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் அடர்ந்து வளர்ந்து நிற்கிறது. முதுமலை வனவிலங்கு சரணாலயத்திலும் படர்ந்து நிற்ப தால் வனவிலங்குகளுக்கும் உணவு பற்றாகுறை ஏற்படுகிறது. பார்த்தீனியம் செடியை தீ வைத்து அழிக்கக் கூடாது. ஏனென்றால் அதன்மூலம் பரவும் புகை, மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த செடிகளை வேருடன் பிடுங்கி, மக்கச் செய்து விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத்தலாம்.

நீலகிரி மாவட்டத்தில் விரவிப் படரும் பார்த்தீனியம் விஷ செடிகளை அழித்து, ஒழிப்பதற்காக வேளாண்மை துறை மூலம் தனி நிதி ஒதுக்கி, அதன்மூலம் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் இந்த செடிகளை அழிக்கலாம் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

Similar News