ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் உலா வந்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வனப்பகுதிகள் கொண்ட ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.தற்போது வனப்பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக யானைகள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளைத் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று குட்டியுடன் யானை ஒன்று இச்சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
பின்பு வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை வாகனங்கள் செல்ல கூடாது என அறிவுறுத்தினர்.பின்பு யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் சாலையிலேயே நின்றன.