கூடலூரில் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் சிக்கியது

நீலகிரி மாவட்டம் கூடலூரில், வனவிலங்குகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-09-17 15:43 GMT

நீலகிரி மாவட்ட பந்தலூர் அருகே சோலாடி பகுதிக்கு அருகில்,  கேரள மாநிலம் மேப்பாடி பகுதியில்,  ஒரு கும்பல் தொடர்ச்சியாக வன விலங்குகளை வேட்டையாடி வருவதாக வனச்சரகருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்,வனச்சரகர் தலைமையில் குழுவினர்,  தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இதில், வலைவிரித்து கடமானை சிக்க வைத்து வேட்டையாடி இறைச்சி விற்பனை செய்வதற்கு தயார் நிலையில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த வேட்டையில் ஈடுபட்டராஜன் (48), மோகனன் (38), சிவகுமார் (40), கில்பர்ட் (40)ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும், அவர்கள் வைத்திருந்த ஆயுதங்கள், இருசக்கர வாகனம், இறைச்சி ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இவர்களுக்கு நக்சல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News