கூடலூரில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானை: விளை நிலங்களில் அட்டகாசம்

கூடலூர் அருகே உள்ள குனியல், ஏச்சம் வயல் பகுதியில் உலா வரும் காட்டு யானையால் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Update: 2021-08-01 02:44 GMT

காட்டு யானை சேதப்படுத்திய தென்னை மரங்கள்.

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை தென்னை மரங்கள், வாழை மரங்களை சேதப்படுத்தியது. 

கூடலூர் அருகே உள்ள குனியல் ஏச்சம் வயல் பகுதிகளில், சமீபகாலமாக  விநாயகன் என்ற காட்டுயானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இதனால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், நேற்று இரவும் அட்டசாகம் செய்த காட்டு யானை அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட தென்னைமரங்கள், அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்திச் சென்றது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் மனிதரை தாக்கும் அபாயமும் உள்ளதால் யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் எனவும்,  சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News