நீலகிரி: முதுமலையில் புலி தாக்கி முதியவர் பலி

கூடலூர் பகுதியில், ஆடு மேய்க்க சென்ற வரை, புலி தாக்கியதில் சம்பவ இடத்தில் இறந்தார்.

Update: 2021-07-19 14:25 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மண்வயல் ஒட்டியுள்ள நிங்கனகொல்லி பகுதியில் வசிப்பவர் குஞ்சு கிருஷ்ணன் (55). இவர் இப்பகுதியில் விவசாயம் செய்துகொண்டு ஆடு மேய்த்து தன் தாய் வசித்து வந்த  நிலையில் இன்று மதியம் ஆடு மேய்க்க சென்றார். அப்போது அவ்வழியாக இருந்த புலி ஒன்று இவரை தாக்கியுள்ளது.

அவரின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தபோது, இறந்த நிலையில் புதருக்குள் கிடந்தார். இப்பகுதியானது முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஒட்டிய பகுதி என்பதால் அடர்ந்த வனப்பகுதிக்கு புலி சென்று விட்டதாக பகுதி மக்கள் கூறிய நிலையில், அவரின் உடலை எடுக்க விடாமல் இப்பகுதியிலுள்ள மக்களின் நீண்டநாள் நிறைவேறாத கோரிக்கையை வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு தொகுதி எம்எல்ஏ ஜெயசீலன், கூடலூர் டிஎஸ்பி சிவக்குமார், கூடலூர் ஆர்டிஓ சரவணன், கண்ணன் தாசில்தார் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்பகுதியில் காட்டு விலங்குகள்,  மனிதர்கள் இருக்கும் பகுதிக்கு வராமல் தடுப்பதற்காக, அகழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறும் வரை இறந்தவரின் உடலை எடுக்க விட மாட்டோம் என்று முற்றுகையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News