ஆட்கொல்லி புலி இன்று சிக்குமா? மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டை
ஆட்கொல்லி புலியை பிடிக்க, கர்நாடகா மாநிலம் பந்திபூரில் இருந்து மோப்ப நாய் ராணா அழைத்து வரப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினக்குடி வனப்பகுதியில், ஆட்கொல்லி புலி நடமாடுகிறது. இதுவரை நான்கு பேரை கொன்றுள்ளதால், மக்கள் பீதியில் உள்ளனர். எனவே, ஆட்கொல்லியாக மாறிய புலியை உயிருடனோ அல்லது மயக்க ஊசி செலுத்தியோ பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினருக்கு, இதுவரை கண்ணில் சிக்காத புலி, போக்கு காட்டி வருகிறது. ஏற்கனவே புலியை தேடும் பணியில், நாட்டு நாய் அதவை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் இதேபோல் மனிதர்களை வேட்டையாடி புலியை துரிதமாக கண்டுபிடித்த மோப்ப நாய் ராணாவும் தற்போது வரவழைக்கப்பட்டு உள்ளது.
ஐந்து பேர்கொண்ட கர்நாடக குழுவினர், மோப்பநாய் ராணாவுடன் தேடுதல் பணியை துவக்கியுள்ளனர். 150 வன ஊழியர்கள் , இரண்டு மோப்ப நாய்கள், இரண்டு கும்கி யானைகள் என அனைவருக்கும் இதுவரை கண்ணில் சிக்காத புலி இன்றாவது சிக்குமா என எதிர்பார்ப்பு கூடியுள்ளது.