டி-23 புலியை தேடி 13ம் நாளாக தேடுதல் வேட்டை: விரைந்தது மருத்துவக்குழு

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதியில், டி-23 புலியை தேடி 13ம் நாளாக தேடுதல் வேட்டை தொடர்கிறது.

Update: 2021-10-07 01:48 GMT

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி வனப் பகுதியில் பதுங்கியிருக்கும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவினர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி வனப் பகுதியில், ஆட்கொல்லி புலி நடமாடுகிறது.  டி23 என்ற பெயரில் அழைக்கப்படும் புலியை தேடி,  13 வது நாளாக நான்கு பேர் கொண்ட வனத்துறை குழு தேடி வருகிறது. கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் இருந்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த புலி,  கடந்த 13 நாட்களாக வனத்துறையினருக்கு சிக்காமல், போக்கு காட்டி வருகிறது.

வனத்துறை அதிகாரிகள் குழு, மருத்துவக்குழு, வன ஊழியர்கள், என அனைவரும் ஒவ்வொரு நாளும் புலியைத் தேடி வருகின்றனர். இன்றுடன் 13 நாளாக கண்ணுக்கு சிக்காத புலியை தேடி,  நான்கு பேர் கொண்ட வனக்குழு,  புலி தென்பட்டுள்ள வனப் பகுதியை நோக்கி அதிகாலையிலேயே விரைந்தனர். ஏற்கனவே வனப்பகுதியில் பரண் அமைத்து நான்கு பேர் கொண்ட குழு, புலியின்  நடமாட்டத்தை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News