கூடலூர் பகுதியில் யானை அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

ஒருபுறம் புலி, மறுபுறம் யானை என வனவிலங்குகள் மத்தியில் அன்றாட வாழ்க்கையை அச்சத்துடன் வாழும் கூடலூர் மக்கள்.

Update: 2021-09-29 14:12 GMT

கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 6 நாட்களாக புலி அச்சுறுத்தி வருகிறது. இதுவரை வனத்துறையினரிடம் சிக்காமல் உள்ளது. இது ஒருபுறமிருக்க கூடலூர் அருகே உள்ள மேல பாலம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விநாயகன் என்ற காட்டு யானை வீடுகளையும், விளை நிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

இதனால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். இதனால் இரவு பணியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இன்று கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை கண்காணித்து விரட்டும் பணியில் வனத்துறை குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கூடலூர் சுற்றுப்பகுதிகளில் ஒருபுறம் புலி மறுபுறம் யானை என வனவிலங்குகளுக்கு மத்தியில் மக்கள் நிம்மதி இன்றி தவித்து வருகின்றனர். இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags:    

Similar News