கூடலூர் அருகே அதிகாலையில் உலா வந்த காட்டு யானை - மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, பாடந்துறையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்தனர்

Update: 2021-07-13 02:52 GMT

கூடலூர் பாடந்துறை கிராமத்தில் உலா வந்த ஒற்றை காட்டு யானை.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சமீப காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலும்,  தேயிலைத் தோட்டங்களிலும் உலாவரும் காட்டு யானைகளால் தொழிலாளர்களும் குடியிருப்புவாசிகளும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கூடலூர் அருகே  பாடந்துறை என்னும் பகுதியில், இன்று அதிகாலையில் ஊருக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது; ஒற்றையடிப் பாதையில் நடந்து வந்த யானையைக் கண்ட பொதுமக்கள்,   அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து,  அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் ஒலிபெருக்கி வாகனம் மூலம் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இரவு நேரங்களில் மட்டும் உலா வந்த காட்டு யானைகள், தற்போது பகல் நேரங்களிலும் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News