நீலகிரி மாவட்டம் கூடலூரில் வாழைகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
முதுமலை புலிகள் காப்பக கரையோரத்தில் ஸ்ரீமதுரைஊராட்சி உள்ளது.இந்த பகுதியில் காட்டுயானைகள் இரவில் புகுந்து வீடுகள், விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளி வீட்டை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் கிராம மக்கள் திரண்டு வந்து காட்டுயானையை விரட்டி அடித்தனர். இருப்பினும் காட்டுயானை தொடர்ந்து அப்பகுதிக்கு வருகிறது.மேலும் அப்பகுதியில் பயிரிட்டுள்ள வாழைகளை தினமும் தின்று சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டுயானை நாசம் செய்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.