கொரோனா விதிமீறல் - கூடலூரில் வங்கிக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்

நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் கூட்ட நெரிசல் காணப்பட்டதை அடுத்து, வங்கிக்கு 5000 அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2021-07-06 13:06 GMT

சித்தரிக்கப்பட்ட படம்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியில்,  கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனா விதிமுறைகளை  பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் கூட்டமாக காணப்பட்டனர். இதனால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த தாசில்தார் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் சீஜா ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விதிமீறல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து,  அந்த வங்கிக்கு ரூ. 5000 அபராதம் விதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News