கூடலூரில் யானை அட்டகாசம் இரவு பணியில் ஈடுபட்ட வேட்டை தடுப்பு காவலர்கள்
கூடலூர் அருகே குனியல், ஏச்சம் வயல் பகுதியில் தொடர்ந்து வரும் யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர் அருகே குனியல் ,ஏச்சம் வயல் பகுதியில் தொடர் யானையின் நடமாட்டத்தால் இரவு முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்.. கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் விநாயகம் என்ற காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து தென்னை மரங்கள் வாழை மரங்களை சேதப்படுத்தி வந்தது.
இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது மேலும் யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில் நேற்று சுமார் 10க்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை நுழையாமல் இருக்க இரவு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.