கூடலூரில் குடியிருப்பில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூரில் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை;
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி அருகே அள்ளூர் வயல் பகுதியை சேர்ந்த வாசுதேவன் தனியார் தோட்ட காவலாளியாக பணியாற்றி வருகிறார் . இந்நிலையில் இன்று மாலை வழக்கம்போல வாசுதேவன் வேலைக்கு சென்றார்.
வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில் அப்பகுதிக்கு காட்டு யானை ஒன்று வந்தது. அப்போது அந்த காட்டுயானை வாசுதேவன் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் வீட்டில் இருந்த வாசுதேவன் குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்து பின்னர் அவர்கள் காட்டுயானையை துரத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியபோது , அப்பகுதியை சேர்ந்தவர்கள் காட்டு யானை தொந்தரவு அதிகமாக உள்ளது இதனை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் யானை நடமாத்தை கண்டறித்து அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.