என்னைத் தாண்டிப் போ பார்க்கலாம் -கம்பீரமாக சாலையை மறித்த ஒற்றை காட்டு யானை
மசினகுடியிலிருந்து மாயார் செல்லும் சாலையில் இரவில் சாலையில் நின்ற ஒற்றை யானையை அச்சத்துடன் கடந்த வாகன ஓட்டிகள்.;
கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாயார் செல்லும் சாலையில் மரக் கிளையை உடைத்து வழிமறித்த யானை நூலிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி மாயார் சிங்கார வாழைத்தோட்டம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் அடர்ந்த வனப்பகுதிகளிடையே உள்ளது. நேற்று இரவு மாயார் செல்லும் சாலையில் மரத்தை உடைத்த காட்டு யானை சாலையை வழிமறித்தது உடனடியாக வாகன ஓட்டி சாதுரியமாக யானையை கடந்து சென்றார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது