உதகையில் 447 கோடியில் பல்நோக்கு மருததுவமனை : முதல்வர் பேச்சு

நீலகிரி மலை மாவட்ட மக்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் உதகமண்டலத்தில் 447 கோடி ரூபாய் மதிப்பில் நவீன பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டு வருவதாக அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.;

Update: 2021-04-01 11:42 GMT

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அஇஅதிமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :கூடலூர் பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். சொந்த வீடில்லாத அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கட்டி தரப்படும்,

பந்தலூரில் அரசு கல்லூரி அமைக்கப்படும், அதிகளவு தோட்டப் பயிர்கள் சாகுபடி செய்யப்படும் கூடலூரில் வாசனை திரவிய தொழிற்கலை அமைக்கப்படும், ஊசி மலை பகுதி சுற்றுலா ஸ்தலமாக மேம்படுத்தப்படும் என உறுதியளித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் 808 கி.மீ தூர சாலைகள் 600 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். பின்தங்கிய கூடலூர் பகுதி மக்கள் பயனடைகின்ற வகையில் 8 அம்மா மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் கூறினார்.

Tags:    

Similar News