கூடலூரில் பிடிபட்ட மலை பாம்பு

தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த 12 அடி மலைபாம்பை மீட்ட வனத்துறையினர் வனத்தில் விட்டனர்.

Update: 2021-05-07 09:00 GMT

தேயிலைத்தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு

கூடலூர் அருகே அரசு தேயிலைத் தோட்டத்தில், தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த 12 அடி நீள மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினர் பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குடோன் பகுதியில் உள்ள அரசு தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் இன்று வழக்கம்போல தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே பெரிய மலைப்பாம்பு ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் தேயிலை செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சுமார் 12 நீளம் கொண்ட மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தனர். மீட்கப்பட்ட மலைப்பாம்பு கீழ்ப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

Tags:    

Similar News