காயத்துடன் சுற்றி திரிந்த குட்டி யானை பலி

முதுமலை வனப் பகுதியில் நெற்றியில் காயப்பட்ட தாயை பிரிந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்

Update: 2021-02-16 16:53 GMT

முதுமலை சாலையோரம் ஒட்டியுள்ள வனப்பகுதியில் 3 மாதம் ஆன ஆண் குட்டி யானை காயத்துடன் உலா வந்தது குட்டி யானைக்கு மருத்துவl சிகிச்சை அளித்தும் தாயிடம் சேர்க்கும் முயற்சி பயனளிக்காமல் குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது .

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த முதுமலை ஒட்டியுள்ள மிதிர்ல்லால் பாலம் அருகில் சாலையோரம் ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஒரு குட்டி யானை காயத்துடன் தனியாக இருப்பது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது .

சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும் வனத்துறை மருத்துவர் ராஜேஷ் குமார் அவர்கள் குட்டி யானையை தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு சிகிச்சை அளித்து உணவு அளித்தனர், அத்துடன் இப்பகுதியில் தாய் யானை உள்ளதா என்பது தேடும் பணியில் ஈடுபட்டனர் . நீண்ட நேரம் இந்த குட்டி யானைக்கு சிகிச்சையளித்த பின் தாய் யானையிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. குட்டி யானை இறந்த இச்சம்பவம் வனத்துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News