பிரச்சாரத்திற்கு தாமதமாக வரும் பிரபலங்கள்- மக்கள் சோர்வு

Update: 2021-03-29 14:55 GMT

அரசியல் கட்சி பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவது தாமதமாவதால் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் சோர்வடைந்து விடுகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா கோத்தகிரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக 12 மணிக்கு பிரச்சாரம் நடைபெறும் என கூறி குன்னூர் மற்றும் கோத்தகிரியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

ஆனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள் மிகவும் சோர்வடைந்தனர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் நிழலைத் தேடி கடைகளின் ஓரத்தில் அமர்ந்து குளிர்பானங்களை குடித்தனர்.கூட்டத்திற்கு என அழைத்து வந்து 2 மணி நேரம் காக்க வைப்பது மிகவும் வேதனையாக உள்ளதாக கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் சிலரின் பேச்சாக இருந்தது.

Tags:    

Similar News