குன்னூரில் சுற்றி திரிந்தவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை
நகர காவல்ஆய்வாளர் பிருத்விராஜ் உதவி ஆய்வாளர் நசீர் ஆகியோரின் தலைமையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;
குன்னூரில் அத்தியாவசிய தேவைகளுக்காக பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டுமென்று காவல்துறை சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்காக குறிப்பிடப்பட்டுள்ள சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
எனவே வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயமாக முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்று விழிப்புணர் வாசகங்களை கையில் ஏந்தி குன்னூர் நகர காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் நசீர் ஆகியோரின் தலைமையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.