கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள்

நீலகிரி முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.

Update: 2021-03-01 12:05 GMT

குன்னூர் அருகேயுள்ள கேத்தி பகுதியில் அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் சார்பில் மாவட்ட அளவில் கைபந்து போட்டிகள் நடைப்பெற்றது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள கேத்தி பகுதியில் அப்துல் கலாம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கபடி, சிலம்பாட்டம், மட்டை பந்து, கைபந்து போன்ற பல்வேறு போட்டிகள் நடைப்பெற்று வருகிறது.

இதில் மாவட்ட அளவில் 12 அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் முதல் இரண்டு மாத காலமாக நடைபெற்ற கைபந்து இறுதிப் போட்டிகள் கேத்தி C.S.I மைதானத்தில் நடைப்பெற்றது.

இதில் குன்னூர் கிளன்டேல் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கும் மற்றும் மசினகுடி செம்மனக்கல் ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற இரண்டு அணிகள் மோதியது. இதில் மசினகுடி செம்மனக்கல் ஸ்போட்ஸ் கிளப் அணி 23 க்கு 25 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதிமுக கழக அமைப்பு செயலாளர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜூனன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

Tags:    

Similar News