நீலகிரி மாவட்டத்தில் இ-பதிவு முறை தொடர்ந்து அமலில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறும் போது, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகமாக உள்ளது. இதனை கண்டுகளிக்க பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். வெளி மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைவதற்கு இ - பதிவு என்ற முறை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது.எனவே சுற்றுலா பயணிகள் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இம் மாவட்டத்திற்கு வருவதற்கு இ-பதிவு மூலம் பதிவு செய்து வர வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.