கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை
திருச்செங்கோடு அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
திருச்செங்கோடு அருகே செங்கோடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சரண்யா (30). கடந்த 15-ந் தேதி பட்டுக்கோட்டையில் சரண்யாவின் தங்கைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதில் சரவணகுமார், மனைவி சரண்யா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். திருமண நிச்சயத்திற்கு சீர் வரியை செய்வதில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடைபெற்றுள்ளது.
வீட்டிற்கு வந்தபிறகு, இதனால் விரக்தியடைந்த சரண்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சர்ணயா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.