திருச்செங்கோடு அருகே மனைவி பிரிந்து சென்றால் வெல்டிங் தொழிலாளி தற்கொலை

திருச்செங்கோடு அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-11 06:30 GMT

திருச்செங்கோடு அருகே, மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்செங்கோடு தாலுக்கா, கருங்கல்பட்டி, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (33). வெல்டிங் தொழிலாளி. இவருக்கும் நித்யா (22) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் நித்யா, கணவரிடம் கோபித்து கொண்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

வீட்டில் தனியாக வசித்து வந்த வரதராஜன் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்தார். இதனால் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வரதராஜன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News