திருச்செங்கோடு சொசைட்டியில் ரூ.20 லட்சத்திற்கு மஞ்சள் ஏல விற்பனை
திருச்செங்கோடு கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான மஞ்சள் விற்பனை செய்யப்பட்டது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சொசைட்டி (டிசிஎம்எஸ்) தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு மஞ்சளை கொள்முதல் செய்தனர். மொத்தம் 450 மூட்டை மஞ்சள் ரூ.20 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. ஏலத்தில் விரலி மஞ்சள் ரூ.7,051 முதல் ரூ.10,353 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.6,075 முதல் ரூ.8,020 வரையிலும், பனங்காளி ரூ. 10,919 முதல் ரூ. 14,699 வரையிலும் ஏலம் போனது.