திருச்செங்கோட்டில் மஞ்சள் ஏலம்: வெளிமாநில வியாபாரிகள் பங்கேற்பு
திருச்செங்கோட்டில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், வெளிமாநில வியாபாரிகள் பங்கேற்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில், மஞ்சள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் விரலி ரக மஞ்சள் ரூபாய் ஆறு ஆயிரத்து 433 முதல், ரூபாய் 7, 812 வரையில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
பனங்காலி ரக மஞ்சள் ரூபாய் 12 ஆயிரத்து 500 முதல், ரூபாய் 20 ஆயிரத்து 800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 2,500 மஞ்சள் மூட்டைகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதாகவும், ஏலத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, மற்றும் வெளி மாநில வியாபாரிகள் பலர் கலந்து கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.