நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ. பணிக்கான போட்டித்தேர்வு: 715 பேர் ஆப்சென்ட்

நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.ஐ. பணிக்கான போட்டித்தேர்வில் 715 பேர் ஆப்சென்ட் ஆனார்கள்.

Update: 2022-06-26 09:30 GMT

எஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடந்த மையத்தை நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு மையங்களில் போலீஸ் எஸ்.ஐ. பணிக்கான போட்டித்தேர்வு நடைபெற்றது. காலையில் முதன்மை எழுத்துத்தேர்வு, பிற்பகலில் தமிழ் தகுதி தேர்வு என 2 பகுதியாக இந்த தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரியில் இதற்கான மையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. காலையில் நடந்த தேர்வை எழுத 3,242 ஆண்கள், 687 பெண்கள் என மொத்தம் 3,929 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 715 பேர் தேர்வுக்கு வரவில்லை. மீதமுள்ள 3,214 பேர் தேர்வு எழுதினர். இதேபோல் பிற்பகலில் நடந்த தமிழ் தகுதி தேர்வை எழுத 3,631 ஆண்கள், 751 பெண்கள் என மொத்தம் 4,382 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 801 பேர் தேர்வு எழுத வரவில்லை. மீதமுள்ள 3,581 தேர்வு எழுதினர். போட்டித் தேர்வை மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News