1,100 கிலோ ரேசன் அரிசி கடத்திய தொழிலாளி கைது: மொபட் பறிமுதல்

திருச்செங்கோடு அருகே, கடத்தப்பட்ட 1,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கூலித்தொழிலாளியை கைது செய்தனர்.

Update: 2022-03-09 07:30 GMT

நாமக்கல் மாவட்ட, குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில், எஸ்.ஐ அகிலன், எஸ்எஸ்ஐ சத்தியபிரபு, ஏட்டு கூத்தகவுண்டன் ஆகியோர், திருச்செங்கோடு அடுத்த மாங்குட்டைபாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள முட்புதர் அருகில், மொபட்டில் இருந்து, ஒருவர் அரிசி மூட்டைகளை இறக்கி கொண்டிருந்தார். சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர், ராசிபுரம் அருகே கட்டநாச்சம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிசாமி (40) என்பதும் அவர் விற்பனைக்காக ரேசன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.

அவர் அளித்த தகவலின் பேரில்,  22 பிளாஸ்டிக் சாக்குகளில் வைக்கப்பட்டிருந்த, 1,100 கிலோ எடையுள்ள ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், ரேசன் அரிசி எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரேசன் அரிசி கடத்த பயன்படுத்திய மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News