திருச்செங்கோடு நகராட்சியில் எம்எல்ஏ ஈஸ்வரன் மக்கள் குறை கேட்பு
திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் எம்எல்ஏ ஈஸ்வரன் வார்டு வாரியாக பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
திருச்செங்கோடு தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்எல் ஏ ஈஸ்வரன் நகராட்சிப் பகுதியில் வார்டு வாரியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
இன்று 23 மற்றும் 33-வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து,சட்டசபை தேர்தலில் வாக்களித்து வெற்றிபெச் செய்ததற்காக நன்றி தெரிவித்தார். பின்னர் மூதாட்டி ஒருவருக்கு மருத்துவ செலவிற்காக நிதி உதவி வழங்கினார்.
தொடர்ந்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட கொமதோக செயலாளர் நதி ராஜவேல், நகர செயலாளர் அசோக் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.